பாக்கெட் நாவல் எழுத்துப் போட்டிகள் – கலந்துகொள்வோமா?

எழுத்துப் போட்டிகள் எதற்காக நடத்தப்படுகின்றன? 

எழுத்துப் போட்டிகள் என்பவை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை மதிப்பாய்வுக்காகச் சமர்ப்பிக்கும் போட்டிகள். பொதுவாக ஒரு பரிசை வெல்லும் நம்பிக்கையிலோ அல்லது தங்களது எழுத்துத் திறமையை மதிப்பீடு செய்யும் நோக்கிலோ கலந்து கொள்ளலாம். நீங்கள் எந்த வகையான வேலையைச் செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து pocket novel reader செயலியில் பல்வேறு வகையான போட்டிகள் உள்ளன. 

எழுத்தாளர்களுக்குப் போட்டிகள் என்பது மதிப்புக்குரிய ஒரு விஷயமா ?

சில எழுத்தாளர்களுக்கு ஒரு எழுத்துப் போட்டியில் நுழையும் எண்ணம் என்பதே கொஞ்சம் பயமுறுத்தும் ஒன்றுதான்.  நான் இதில் கலந்து கொள்ளலாமா ? இதில் என் பங்கு என்ன? எனது வேலையை மக்கள் மதிப்பிடுவது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான் இல்லையா?

ஆனால் எழுத்து போட்டிகள் (writing contests) குறித்து அவ்வளவு பயப்படத் தேவையில்லை! எழுதும் போட்டிகள் அவை உங்கள்  மனதுக்கு பிடித்த வேலையை உற்சாகத்தோடு செய்வதற்கான ஒரு அற்புதமான வழியாகும். Pocket novel reader contest ல் உங்கள் முயற்சியை ஏன் தொடங்க வேண்டும் ? போட்டிகள் குறித்த உங்கள் பயத்தை உடைக்க, நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள் இவைதான்

  • புத்தக வெளியீடு, 
  • பரிசுகள் மற்றும்
  • பயிற்சி 

புத்தக வெளியீடு 

பரிசின் பிரத்தியேகங்கள் போட்டியைப் பொறுத்து மாறுபடும், ஆனால் இந்த போட்டிகளில் பெரும்பாலானவை நீங்கள் வெற்றி பெற்றால் வெளியிடப்படும். நீங்கள் ஒரு நாவலாசிரியராக இருந்தால், சிறுகதை அல்லது புனைகதைப் போட்டிகளைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை என்று நீங்கள் நினைக்கலாம்; ஆனால், அது உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை!

இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெற்றால், உங்கள் சில படைப்புகள் பத்திரிகைகளில் வெளியிடப்படும். இதன் மூலமாக அதிகப்படியான பொது வாசகர்களை உங்களது எழுத்துக்கள் சென்று சேரும்! 

உங்களுக்கான பெயரை உருவாக்குவதற்கான நேரம் இது. இந்த போட்டிகள் மூலம் உங்கள் எழுத்துப் பயணத்தைப் பின்தொடரக்கூடிய வாசகர்களை உங்களால் உருவாக்க முடியும்! பின்னர், உங்கள் நாவலை வெளியிடுவதற்கான நேரம் வரும்போது, ​​நீங்கள் ஒரு ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட எழுத்தாளராக மாறி இருப்பீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

ஆகவே எழுத்துப் போட்டிகள் குறித்த உங்கள் தனிப்பட்ட பயங்களைத் தூர எறிந்து விட்டு உங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வையுங்கள் !

பரிசுத் தொகை

மனதிலிருந்து வெளிப்படையாக பேசலாமா.? கொஞ்சம் கூடுதல் பணம் உங்கள் பாக்கெட்டில் இருப்பதால் உங்களுக்கு அது ஒருபோதும் வலிக்காது தானே! ஆகவே பரிசுத்தொகை என்பது தான் எழுத்து போட்டிகளுக்கான உந்து சக்தியாக இருக்கலாம். எனினும் நீங்கள் நுழையும் போட்டியின் விவரங்களை முழுமையாகச் சரிபார்க்கவும். பல நேரங்களில் வெற்றி பெற்றால் சில உயர்ந்த பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சில சமயங்களில் இந்த பரிசுகள் சிறியதாக இருக்கலாம், ஆனால், அதன் மதிப்பு உங்கள் பெயரை நிலைநிறுத்துவதாக இருக்கலாம் என்பதையும் கவனத்தில் வையுங்கள். அவற்றில் சில பரிசுகள் பத்தாயிரம் ரூபாய்களுக்கு மேலும் இருக்கலாம்.

உங்கள் புத்தகங்களை சுய-வெளியீடு செய்வது என்பது மிகவும் விலை உயர்ந்த செலவாகவே இது வரை இருந்து வந்திருக்கிறது. அந்த சுமையை இந்த போட்டிகள் குறைத்து விட முடியும்.  மேலும் எழுத்துப் போட்டி என்பது உங்கள் விருப்பமான தொழிலை செய்து பணத்தைப் பெறுவதற்கும் சேமிப்பதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

பயிற்சி

எழுத்துப் போட்டிகளைத் தொடர்வது என்பது உங்கள் எழுத்தைத் தொடர வேண்டும் என்பதை நிர்பந்திக்கிறது. இதன் பொருள் என்னவென்றால் ஒரு பரிசை வெல்வதற்கு போதுமானது என்று நீங்கள் நினைக்கும் நாவல் ஒன்றை நீங்கள் உருவாக்க வேண்டும். இது ஒரு எழுத்தாளராக உங்கள் எழுத்துக்களை மேம்படுத்த உதவி செய்கிறது. தவிர எழுத்துப் போட்டிகளில் கலந்து கொள்வதால் உங்கள் எழுத்து மேலும் செப்பனிடப்படுகிறது என்பதும் மகிழ்ச்சிக்குரிய விசயம் தான். 

எழுத்துப் போட்டிகள் நம் திறமைக்குச் சவலாக அமைவதால் நம் எழுத்தும் மேலும் மெருகேற உதவுகிறது. உங்கள் தனிப்பட்ட படைப்பை வாசகராக அணுகாமல் விமர்சகராகப் பலரும் அணுகுவார்கள் என்பது சற்றே அச்சம் தரும் செயல்கள்தான். இருந்தாலும் எழுத்துப் போட்டிகளின் மூலமாக நாம் பலதரப்பட்ட அனுபவங்களைப் பெற முடியும்.

அது தவிர எழுத்துக்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறை, காத்திருப்பு மற்றும் முடிவுகளுக்காகக் காத்திருக்கும் செயல்முறைக்கு நீங்கள் உங்கள் மனதைப் பழகிக்கொள்வீர்கள். மிக முக்கியமாக நிராகரிப்பை எவ்வாறு கையாள்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இவை அனைத்தும் எழுத்தாளர்களுக்கு முக்கியமான திறன்கள் என்பது உங்களுக்கும் தெரியும்தானே !

எழுத்துப் போட்டிகள் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது ?

பொதுவாகப் போட்டிகள் மற்றவருக்கு உங்கள் உணர்வுகளையும் எண்ணங்களையும் சரியான முறையில் வெளிப்படுத்த உதவுகின்றன. உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. போட்டிகளில் கலந்து கொண்டு எழுதுவது விமர்சன சிந்தனை, ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது என்பதும் மிக முக்கியமான காரணங்களில்  ஒன்றுதான்.

ஆகவேதான் வெற்றியாளராக இல்லாவிட்டாலும் போட்டிகளில் கலந்து கொள்வதே மிக தைரியமான முயற்சியாக பாராட்டப்படுகிறது. முயற்சி செய்வது மதிப்புக்குரியது.

எழுதும் போட்டியில் தனியாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் நுழைவது பொதுவான எழுத்தாளர்கள் விதிகளைப் பின்பற்ற நம்மைத் தயார் செய்கிறது. எழுத்து வாழ்க்கைக்கு இது ஒரு நல்ல நடைமுறை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

இன்னும் ஏன் காத்திருக்கிறீர்கள்..! பாக்கெட் நாவல் உங்களுக்காகவே பலவிதமான போட்டிகளை அறிமுகப்படுத்தி உங்கள் எழுத்துக்களை கொண்டாடக் காத்திருக்கிறது !

போட்டி விபரங்கள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் முகநூல் பக்கத்துடன் தொடர்பில் இருங்கள் !


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *